தமிழ்நாடு மாநிலப் பொது சுகாதார இயக்குநரமானது இந்த நோயைக் மிக நன்கு கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்குமான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மனிதர்கள் எதிர்பாராத விதமாக ஓம்புயிரியாக மாறுகின்ற, பூச்சிகளால் பரவும் இந்த விலங்குவழித் தொற்று நோய் ஆனது பல்வேறு இடங்களில் பதிவாகியுள்ளது.
இந்த நோயின் அறிகுறிகள் வெளிப்படத் தெரிவதற்கான காலம் ஒன்று முதல் இரண்டு வாரங்கள் ஆகும்.
வேளாண் தொழிலாளர்கள், வெளிப்புறச் செயல்பாடுகள் சார்ந்த ஆர்வலர்கள் மற்றும் புதர்கள் நிறைந்தப் பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள், எலிகள் மற்றும் பூச்சிகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஆகியோர் இதனால் பாதிக்கப்படக் கூடிய பெரும் ஆபத்தில் உள்ளனர்.
பூச்சிக்கொல்லித் திரள் உருவாக்கம், கிராமங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரும் புதர்களைச் சுத்தம் செய்தல், கொறித்துண்ணிகளின் (எலிகள்) எண்ணிக்கையைக் குறைத்தல் ஆகியவை இந்த நோயைத் தடுப்பதற்கான கட்டுப்பாடு மற்றும் தடுப்பு முறைகள் ஆகும்.