TNPSC Thervupettagam

ஸ்க்ரப் டைபஸ் தொற்று

September 25 , 2023 426 days 273 0
  • ஒடிசாவின் பர்கர் மாவட்டத்தில் ஸ்க்ரப் டைபஸ் தொற்று காரணமாக சமீபத்திய வாரங்களில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
  • இந்தக் கடுமையான தொற்று நோய் ஆனது ஓரியன்டியா சுட்சுகாமுஷி என்ற ஒட்டு உண்ணியால் ஏற்படுகிறது.
  • ஸ்க்ரப் டைபஸ் தொற்று ஆனது பாதிக்கப்பட்ட சிகர் எனப்படும் பூச்சி (லார்வா மைட்ஸ்) கடிப்பதால் பரவுகிறது.
  • இது பொதுவாக நவம்பர் முதல் ஜூலை மாதம் வரையிலான மழைக்காலத்தில் ஏற்படுகின்ற ஒரு நோய்க் காரணியால் பரவும் நோயாகும்.
  • காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் தோலில் கறுப்பு நிற, வீக்கமடைந்தப் பகுதிகள் ஆகியவை இந்த நோயின் பொதுவான அறிகுறிகளாகும்.
  • ஸ்க்ரப் டைபஸ் தென்கிழக்கு ஆசியா, அதனுடன் தொடர்புடைய தீவுக் கூட்டங்கள், வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானில் பெருமளவில் காணப் படுகிறது.
  • இது குறித்து முதலில் 1899 ஆம் ஆண்டில் விவரிக்கப்பட்டு, 1906 முதல் 1932 ஆம் ஆண்டு வரை இந்தத் தொற்று குறித்து விரிவாக ஆய்வு செய்யப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்