TNPSC Thervupettagam

ஸ்டாக்ஹோம் மாநாட்டின் 18வது சந்திப்பு

October 10 , 2022 650 days 334 0
  • ஸ்டாக்ஹோம் மாநாட்டிற்கான நிரந்தரக் கரிம மாசுபடுத்திகளின் (POP) மறு ஆய்வுக் குழுவின் (POPRC-18) 18வது சந்திப்பானது இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்றது.
  • இந்த உடன்படிக்கையின் கீழ் பட்டியலிடுவதற்காக மேலும் ஐந்து இரசாயனங்கள் இந்தச் சந்திப்பில் உட்சேர்க்கப்பட்டன.
  • இதில் பட்டியலிடப்பட்ட அந்த மூன்று இரசாயனங்கள் (குளோரி பைரிஃபோஸ், குளோரினேட்டட் பாரஃபின் (பரிந்துரைக்கப் படுவதற்கு அப்பாற்பட்ட அளவு) மற்றும் நீண்ட சங்கிலித் தொடர் அமைப்பு கொண்ட பெர்ஃப்ளூரோ கார்பாக்சிலிக் அமிலங்கள்) ஏற்கனவே POPRC-17 மாநாட்டில் பரிந்துரைக்கப்பட்டன.
  • ஒரு தீ பரவுத் தடுப்பானான டெக்லோரேன் பிளஸ் மற்றும் சில தனிநபர் பராமரிப்புப் பொருட்களில் பயன்படுத்தப்படும் நிலைப் படுத்தியான UV-328 ஆகிய இரண்டு இரசாயனங்கள் இந்த அமர்வில் மதிப்பீடு செய்யப்படும்.
  • குளோர்பைரிஃபோஸ் என்ற இரசாயத்தினை ஒரு நிரந்தரக் கரிம மாசுபடுத்தியாகப் பட்டியலிட ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு மேற்கொண்ட ஒரு முன் மொழிவிற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.
  • இதில் இந்தியா வாதிட்ட கருத்துகள்
    • குளோர்பைரிஃபோஸ் ஒரு புற்றுநோய் உண்டாக்கும் காரணி அல்ல, எனவே அதன் செறிவு குறைவாகவே உள்ளது.
    • POPRC-17 சந்திப்பில் வழங்கப்பட்ட சில ஆய்வு அறிக்கைகள் கூறுகின்ற, குளோர் பைரிஃபோஸ் பாதகமான விளைவுகளைக் கொண்டுள்ளன என்ற கருத்தானது சக மதிப்பாய்வு செய்யப் படவில்லை.

இந்தியாவில் குளோர்பைரிஃபோஸ்

  • 1977 ஆம் ஆண்டு முதல், 1968 ஆம் ஆண்டு பூச்சிக்கொல்லிச் சட்டத்தின் கீழ் குளோர் பைரிஃபோஸ் பதிவு செய்யப் பட்டுள்ளது.
  • மேலும், அனுபம் வர்மா குழுவானது 2015 ஆம் ஆண்டில் இதனைத் தொடர்ந்துப் பயன்படுத்தலாம் என்று கூறி தனது மதிப்பாய்வில் பரிந்துரைத்தது.
  • 2021 ஆம் ஆண்டில் குளோர்பைரிஃபோஸ் வேளாண்மைப் பயன்பாட்டிற்கு வேண்டி அங்கீகரிக்கப் பட்டது.
  • கொண்டைக் கடலை, அரிசி மற்றும் பருத்தி ஆகியவற்றினைப் பாதிக்கும் பூச்சிகளுக்கு எதிராக இதனைப் பூச்சிக் கொல்லியாகப் பயன்படுத்துவதையும் இது உள்ளடக்கியது.
  • இந்தியாவில் 18 பயிர்களுக்குப் பயன்படுத்துவதற்காக இது அங்கீகரிக்கப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசாங்கங்களால் தடை செய்யப்பட்ட பத்து பூச்சிக் கொல்லிகளில் இதுவும் ஒன்றாகும்.
  • சீனாவும் இந்தியாவும் குளோர்பைரிஃபோஸ் ரசாயத்தினை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்