ஸ்டார்கார்ட் நோயைக் குணப்படுத்தச் செய்வதற்கு என்று மரபணுக்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை செயல் விளக்கிக் காட்டுவதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஒரு நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
ஸ்டார்கார்ட் நோய் என்பது குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரிடையே படிப்படியான பார்வை இழப்புக்கு வழி வகுக்கும் ஒரு மரபணு வழி பரவும்/ பரம்பரை வழி நோயாகும்.
இது பொதுவாக இரு கண்களையும் பாதிக்கிறது.
பொதுவாக ஸ்டார்கார்ட் நோய் என்பது ஸ்டார்கார்ட் ஒளிக்குவியச் சிதைவு நோய் என்றும் அழைக்கப் படுகிறது என்பதோடு இது பொதுவாக ABCA4 என்ற மரபணுவில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகிறது.
இந்த மரபணு ஆனது நமது உடல் A என்ற வைட்டமினை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் பாதிக்கிறது.
இந்தியாவில், இந்த நோயின் பரவல் ஆனது 8000 முதல் 10000 பேரில் ஒருவருக்கு என்ற வீதத்தில் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.