OpenAI, ஆரக்கிள், சாப்ட்பேங்க் மற்றும் MGX ஆகிய நிறுவனங்கள் 'ஸ்டார்கேட்' எனப் படும் உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தினை நிறுவுவதற்காக ஒன்றிணைந்துள்ளன.
ஸ்டார்கேட் என்பது அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்க நாட்டில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான முன்னெடுப்பாகும்.
இது செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் பெரும் முன்னேற்றங்களில் ஒரு உலகளாவிய தலைமைத்துவத்தினை நோக்கி அமெரிக்காவை உந்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.