TNPSC Thervupettagam

ஸ்டார்டஸ்ட் 1.0 ஏவுகணை

February 7 , 2021 1297 days 509 0
  • ஸ்டார்டஸ்ட் 1.0 என்ற ஏவுகணை அமெரிக்காவின் மைனேயில் உள்ள லோரிங் வர்த்தக மையத்திலிருந்து விண்ணிற்கு ஏவப்பட்டது.
  • இது முழுக்க முழுக்க உயிரி எரிபொருளால் இயக்கப்படும் முதல் வணிகரீதியிலான விண்வெளி ஏவுதலாகும்.
  • இது அமெரிக்காவின் மைனே தளத்தின்  முதல் வணிக ஏவுதலாகும்.
  • இந்த ஏவுகணையை மைனேவைத் தளமாகக் கொண்ட ஒரு விண்வெளி நிறுவனமான ப்ளூஷிஃப்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
  • இந்த ஏவுகணைகள் கியூப்சாட்ஸ் எனப்படும் சிறிய செயற்கைக் கோள்களை விண்வெளியில் மலிவான விலையில் செலுத்த உதவும்.
  • பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் ஏவுகணைகளின் எரிபொருட்களுடன் ஒப்பிடப் படும் போது உயிரி எரிபொருளானது சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நச்சுத் தன்மையற்றதாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்