TNPSC Thervupettagam

ஸ்டார்ட் அப் இந்தியா தொலைநோக்குப் பார்வை - 2024

May 3 , 2019 1905 days 1316 0
  • வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகமானது ஸ்டார்ட் அப் இந்தியா தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் வரிச் சலுகைகள் போன்ற ஊக்குவிப்பு நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டளவில் நாட்டில் 50,000 புதிய தொழில் தொடக்கங்களை உருவாக்க வழிவகை செய்வதும் 20 இலட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவதுமே இந்த தொலைநோக்குப் பார்வையின் நோக்கமாக உள்ளது.
  • இந்த ஆவணமானது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில்துறை ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையினால் தயாரிக்கப்பட்டது.
ஸ்டார்-அப் இந்தியா
  • 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டமானது இந்திய அரசின் முதன்மை முன்னெடுப்பாகும்.
  • இது தொழில் தொடக்கங்களின் வளர்ச்சிக்கு வலுவான சூழலை உருவாக்குவதையும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியை அடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஸ்டார்-அப் இந்தியா திட்டமானது வரிச் சலுகை உட்பட இதர பல சலுகைகளையும் வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்