தொழிற்சாலை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை குறித்த வர்த்தகத் துறை அமைச்சகத்தின் தகவலின்படி 1,004 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தில்லி ஆகியவை முறையே 3661, 2847 மற்றும் 2552 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஏஞ்சல் வரி, அறிவுசார் சொத்துரிமையின் தீவிர கண்காணிப்பு மற்றும் இதரச் சலுகைகள் உள்ளிட்ட பயன்களை எளிதில் பெற முடியும்.