இராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தை வளர்க்கவும் அதனை மேம்படுத்தவும் இராஜஸ்தான் மாநில அரசு மற்றும் HDFC வங்கிக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கூட்டிணைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், நடப்புக் கணக்குச் சேவை, கடன் அட்டைகள் போன்றவற்றோடு தொடர்புடைய இரு பயன்பாட்டாளருக்கு இடையேயான (end to end) தீர்வையும், இராஜஸ்தான் மாநிலத்தின் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் ஸ்டார்ட் அப்-களின் செயல்பாடுகள் சார்ந்த தீர்வையும் HDFC வங்கி வழங்கும்.
HDFC வங்கியானது நாடு முழுவதும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்க உதவும் சூழலமைப்பை ஏற்படுத்துவதற்குப் பெரிதும் பங்காற்றி வருகின்றது.
மேலும் தன்னுடைய அனைத்து முக்கிய வங்கிக் கிளைகளிலும் அர்ப்பணிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் மண்டலங்களை ஏற்படுத்துவதற்கான அறிவிப்பையும் HDFC வங்கி வெளியிட்டுள்ளது.