TNPSC Thervupettagam

ஸ்டார்ட்அப் இந்தியா முதன்மை நிதி வழங்கும் திட்டம்

April 22 , 2021 1187 days 803 0
  • கருத்திற்கான ஆதாரம், முன்மாதிரி உருவாக்கம், உற்பத்திப் பொருள்களின் சோதனை, சந்தை நுழைவு, மற்றும் வணிகமயமாக்கல் போன்றவற்றினை மேற்கொள்ள தொடக்க நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • ஸ்டார்ட் அப் இந்தியா என்ற முன்னெடுப்புத் திட்டம் தொடங்கப்பட்ட ஐந்தாண்டு நிறைவின் போது நடத்தப்பட்ட “பிராரம்ப் : ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச உச்சி மாநாட்டின்” (Prarambh: StartupIndia International Summit) போது இத்திட்டம் அறிவிக்கப் பட்டது.
  • இத்திட்டம் முதன்மை நிதி வழங்குதல், புதுமைகளை ஆதரித்தல், மாற்றம் மிக்க புதிய யோசனைகளை ஆதரித்தல், அமலாக்கத்தினைச் செயல்படுத்துதல் மற்றும் தொடக்க நிறுவனம் சார்ந்த ஒரு புரட்சியைத் தொடங்க வழிவகை செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள உதவும்.
  • அடுத்த 4 ஆண்டுகளுக்கு ரூ. 945 கோடி தொகையினைப் பிரித்து வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • தொடக்க நிறுவனங்களுக்கு உதவும் 300 ஊக்கப்படுத்து அமைப்புகள் (incubators) மூலம் சுமார் 3600 தொடக்க நிறுவனங்கள் இத்திட்டம் மூலம் ஆதரவளிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • ஒப்புதலளிப்புத் துறை : தொழில் துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்