TNPSC Thervupettagam

ஸ்டார்ஷிப் விண்கலத்தின் வெப்பத் தடுப்பு ஓடு

February 18 , 2025 4 days 44 0
  • இந்தியப் பிரதமருடனான எலோன் மஸ்க்கின் சந்திப்பின் போது, விண்வெளிக்கு என  அனுப்பப் பட்ட பெஹிமோத் ஸ்டார்ஷிப் விண்கலத்தில் இருந்த ஒரு வெப்பத் தடுப்பு ஓடு ஒன்றை மஸ்க் பரிசளித்தார்.
  • ஸ்டார்ஷிப் விண்கலத்தின் வெப்பத் தடுப்பு ஓடு என்பது வளிமண்டலத்தில் விண்கலம் மீண்டும் நுழையும் போது SpaceX நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலத்தினை நன்கு பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள அறுங்கோண பீங்கான் ஓடுகள் ஆகும்.
  • விண்வெளிப் பயண விண்கலத்தின் ஓடுகளைப் போலவே சிலிகா அடிப்படையிலான பீங்கான்களால் இவை ஆனவை ஆனால் இவை அதிக வலிமையானவை மற்றும் அதிக வெப்பத் தடுப்புத் திறன் கொண்டவை ஆகும்.
  • விண்கலத்தின் சதுர வடிவ ஓடுகளைப் போலன்றி, அறுகோண வடிவமைப்பு ஆனது நேர்கோடு கட்டமைப்புகளில் உள்ள சில இடைவெளிகளை நீக்குகிறது என்பதால் இது வெப்பம் ஊடுருவுவதற்கான வாய்ப்புள்ள இடங்களைக் குறைக்கிறது.
  • இந்த ஓடுகள் ஆனது வெப்பத்தைத் திறம்பட வெளியேற்றி, விண்கலக் கட்டமைப்பைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்