TNPSC Thervupettagam

ஸ்திரி ஸ்வபிமன் திட்டம்

January 28 , 2018 2365 days 782 0
  • பெண்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தின் பேணுதலுக்காக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது (Ministry of Electronics and Information Technology - MEITY) ஸ்திரி ஸ்வபிமன் (Stree Swabhiman) எனும்   திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • இத்திட்டத்திற்காக டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள பொது சேவை மையங்களுடன் (Common Service Centre) கூட்டிணைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • முழு பயனை ஈட்டுமளவு பொது சேவை மையங்களை செயல்படுத்துவதன் மூலம், ஊரக பகுதிகளின் வயது வந்த சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு மலிவான, நம்பத்தகு, நவீன, சுற்றுச்சூழலுக்கு உகந்த (Eco-friendly) சானிட்டரி நாப்கின்களின் அணுகலை வழங்கவல்ல நீடித்த மாதிரியை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • மேலும் இத்திட்டத்தின் கீழ் பெண்களிடையே சுகாதாரத்தைப் பற்றிய விழிப்புணர்வும், தாமே தொழில் தொடங்கி சானிட்டரி நாப்கின்களை  தயாரித்து  சந்தைப்படுத்தி வரும் பெண் தொழில் முனைவோர்கள், பிற பெண்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடும் (Personalised Outreach) நிகழ்ச்சியும் மேற்கொள்ளப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்