ஸ்னூக்கர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி தாய்லாந்தைச் சேர்ந்த தனாவாத் திரபோங்பைபோன் என்பவரை 6 – 3 என்ற கணக்கில் வீழ்த்தி 35-வது ஆண்கள் ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
பங்கஜ் அத்வானியின் இந்த வெற்றியின் மூலம் கியூ (Cue) விளையாட்டுகளில் வாழ்நாள் கிராண்ட் ஸ்லாமை நிறைவு செய்துள்ளார்.
இவர் தற்பொழுது ஆசிய மற்றும் உலக சாம்பியன்ஷிப்களின் அனைத்துப் பிரிவுகளிலும் வெற்றி பெற்ற ஒரே வீரர் ஆவார்.
பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் ஆகிய இரண்டிலும் வெற்றி பெற்ற ஒரே வீரர் இவராவார்.
1984 ஆம் ஆண்டில் இந்தப் பிரீமியர் தொழில்சாரா ஆசிய ஸ்னூக்கர் தொடர் தொடங்கியது.
இந்தத் தொடரை ஆசிய பில்லியர்ட்ஸ் விளையாட்டுகள் கூட்டமைப்பு நடத்துகின்றது.