TNPSC Thervupettagam

ஸ்பிட்சர் தொலைநோக்கி

February 1 , 2020 1761 days 822 0
  • நாசாவின் ஸ்பிட்சர் விண்வெளித் தொலைநோக்கியானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றது.
  • நாசாவின் ஸ்பிட்சர் திட்டமானது அண்டத்தை அகச்சிவப்பு ஒளியின் மூலம் 16 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்துள்ளது.
  • ஸ்பிட்சர் விண்வெளித் தொலைநோக்கியானது 2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • நாசா ஆய்வுத் திட்டத்தின் கடைசித் திட்டம் இதுவாகும். 1990 மற்றும் 2003க்கு இடைப்பட்ட காலப் பகுதியில் தொடங்கப்பட்ட நான்கு தொலைநோக்கிகள் (ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி உட்பட) திட்டத்தை நாசா தொடங்கியுள்ளது.
  • வெவ்வேறு அகச்சிவப்பு அலைநீளங்களைப் பயன்படுத்தி, ஸ்பிட்சர் தொலைநோக்கியானது அண்டத்தின் அம்சங்களை ஆய்வு செய்து, வெளிப்படுத்தியது.
  • ஸ்பிட்சர் தொலைநோக்கியானது பொதுவாகப் பொருட்களிலிருந்து வெப்ப கதிர்வீச்சைக் குறிக்கும் அகச்சிவப்புக் கற்றையின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்படவுள்ள நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியானது ஸ்பிட்சர் தொலைநோக்கியினால் ஆய்வு செய்யப்பட்ட அதே அலை நீளங்களில் உள்ள பொருள்களைக் கொண்ட பிரபஞ்சத்தைப் பற்றி ஆய்வு செய்ய இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்