பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து புரிந்து கொள்வதற்கு வேண்டி ஒட்டுமொத்த வான் பரப்பையும் ஆய்வு செய்வதற்காக மிகவும் புகழ்பெற்ற திட்டமான ஸ்பியரெஸ் (SPHEREx) என்ற திட்டத்தை நாசா (NASA) தொடங்குகிறது.
SPHEREx என்பது பிரபஞ்சத்தின் வரலாற்றை அறிவதற்கான நிறமாலை ஒளிமானி, மறு அயனியாக்கத்தின் காலகட்டம் மற்றும் பனிக்கட்டிகளை ஆய்வு செய்தல் என்பதாகும்.
இந்தத் திட்டம் 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்படவிருக்கிறது.