சோஸியலிஸ்ட் தலைவரான பெட்ரோ சான்செஸ் ஸ்பெயின் மன்னர் ஆறாம் பெலிப்பால் (King Felipe VI) ஸ்பெயின் நாட்டின் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.
ஸ்பெயின் நாடானது யூரோ மண்டலத்தின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடாகும். மேலும் ஐரோப்பிய யூனியனில் மிகவும் செல்வாக்கு மிகுந்த நாடாகும்.
சான்செஸ் ஸ்பெயினின் ஏழாவது பிரதமராவார். 1975 ஆம் ஆண்டு ஸ்பெயின் சர்வதிகாரியான ஜெனரல் பிரான்சிஸ்கோ பிரான்கோ ( Francisco Franco) இறந்த பிறகு ஸ்பெயின் ஜனநாயக முறைக்குத் திரும்பியது.