TNPSC Thervupettagam

ஸ்பேஸ் எக்ஸின் தொடர்பு வசதி செயற்கைக் கோள்கள்

January 19 , 2019 2138 days 639 0
  • ஸ்பேஸ் எக்ஸ் ஏவு வாகனம் இரிடியம் தொடர்பு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட இரண்டு வருடகால திட்டத்தை நிறைவு செய்யும் வகையில் புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதையில் 10 செயற்கைக் கோள்களைச் செலுத்தியிருக்கின்றது.
  • இது அதன் அசல் அமைப்பைப் புதிய தலைமுறையிலான கைபேசி தொடர்பு தொழில்நுட்பத்தோடும் உலகளாவிய விமான கண்காணிப்பு வசதியோடும் உள்ள தொழில் நுட்பங்களைக் கொண்டு மாற்றம் செய்யும்.
  • முன்பு பெருங்கடலில் கண்காணிப்புத் தரையிறக்க வசதியுடன் கூடிய ஆளில்லா விமானங்களுடன் உபயோகிக்கப்பட்ட முதல் நிலை இதன் மூலம் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டது. அதே சமயம் மேல்நிலை அதே சுற்றுப் பாதையில் தொடர்கின்றது.
  • இரிடியம் நெக்ஸ்ட் திட்டத்தின் 8-வது மற்றும் இறுதிப் புறப்பாடு மெக்லீன் வெர்ஜினியா நிறுவனத்திற்காக சுற்று வட்டப்பாதையில் வெளியிடுவதற்கான 75 புதிய செயற்கைக் கோள்களை உருவாக்கியிருக்கின்றது.
  • அதில் 66 செயல்பாட்டிலிருக்கும். மேலும் 9 செயல்பாட்டில் (சுற்றுப்பாதையில்) உள்ளவற்றின் உதிரி பாகங்களுக்காக இருக்கும். ஆறு இதர செயற்கைக் கோள்கள் உதிரிபாகங்களாக தரையில் மீதமிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்