'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' - ரஷியா கூட்டு செயற்கைக்கோள் திட்டம்
October 31 , 2017 2619 days 889 0
'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அறிவியல் அமைப்புடன் இணைந்து ரஷியா கூட்டு செயற்கைக்கோள் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக ரஷிய துணைத் தூதரக இயக்குநர் மிக்கேல் கோர்போடா தெரிவித்தார்.
மாஸ்கோ விமான நிறுவனம் விண்வெளி தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' மற்றும் மாஸ்கோ விமான நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சியை பொருளாதார மயமாக்கும் நோக்கத்தில் செயல்படவுள்ளது. இந்தியாவிற்கும் ரஷியாவுக்கும் இடையேயான உறவின் 70-ஆவது ஆண்டு தினத்தை நினைவு கூறும் வகையில் கூட்டு செயற்கைக்கோள் திட்டம் செயல்படவுள்ளது.
இந்தக் கூட்டு செயற்கைக்கோள் இரண்டு மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும். பின்னர், இது விண்வெளியில் நிலை நிறுத்தப்படும். செயற்கைக்கோள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும்போது, அதன் தொடர்பின் மூலம் பல்கலைக்கழக மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். மேலும் இரண்டு நாடுகளின் தேசியக் கீதமும் இசைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.