மென்மையான, கண்ணாடி போன்ற பூக்கள் கொண்ட புதிய வண்ணமலர் (ஆர்க்கிட்) வகைச் செடியானது ஜப்பானிய அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இதற்கு "ஸ்பைரந்தெஸ் ஹச்சிஜோன்சிஸ்" என்று பெயரிடப் பட்டுள்ளது.
ஜப்பானின் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களில் இவை காணப்பட்டப் போதிலும், இவற்றின் செடிகள் அறியப்படாத இனம் என்பதை உறுதிப்படுத்த பத்தாண்டுக் காலம் ஆனது.
ஸ்பைரந்தெஸ் என்பது பொதுவாக லேடீஸ் ட்ரெஸ்ஸ் என்று அழைக்கப்படுகின்ற ஆர்ச்சிடோய்டே என்ற துணைக் குடும்பத்தில் உள்ள ஒரு வண்ணமலர்ச் செடி இனம் ஆகும்.
இது அமெரிக்கா, யூரேசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் வெப்பமண்டல மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் பெரும் பரவலாக காணப்படும் சுமார் 50 இனங்களை உள்ளடக்கியது.