தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலாவதாக மாணவர்களுக்கான ஸ்மார்ட் அடையாள அட்டையை வழங்கிய பள்ளியாக போரூரைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியுள்ளது.
இத்திட்டத்தை அரசானது ப்ரிகான்ஷ்யா என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தியுள்ளது.
இத்திட்டமானது இரண்டு முக்கிய கூறுகளை உள்ளடக்கியுள்ளது.
ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID - Radio Frequency Identification) வருடி மற்றும்
மைக்ரோ சில்லுகள் பொருத்தப்பட்ட அடையாள அட்டை
இந்த அடையாள அட்டைகளானது மாணவர்களின் நுழைவு மற்றும் அவர்கள் வெளியே செல்வதை கண்காணிக்கவும், மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிக்க முற்படும்போது தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோரை எச்சரிக்கை செய்யவும் உதவுகிறது.