மின்சார கைவண்டிகள் (Electric Rickshaws) “Smart E” என்ற பெயரில் ஹரியானாவின் குருகிராமில் தரைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த ரிக்ஷாக்கள் “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டவை. மேலும் இவை GPS வசதியோடு கண்காணிப்பு முறையும் பொருத்தப்பட்டிருக்கும்.
இத்திட்டம் ஹரியானா மாநில அரசோடும் டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனத்தோடும் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
இத்திட்டதின் முக்கிய நோக்கம் கடைநிலைப் பகுதி போக்குவரத்துத் தொடர்பை ஏற்படுத்தித் தருவதாகும். அத்தோடு கார்பன் வெளியீட்டைக் குறைப்பதும் அடுத்த 4-5 வருடங்களில் ஒதுக்கப்பட்ட இளைய சமுதாயத்திற்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதும் இதன் மற்ற முக்கிய நோக்கங்களாகும்.