மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில்நுட்பக் கல்விக்கான அனைத்து இந்திய கழகம் (All India Council for Technical Education - AICTE) ஸ்மார்ட் இந்தியா ஹேகத்தான் 2018-ஐ ஏற்பாடு செய்துள்ளது.
ஸ்மார்ட் இந்தியா ஹேகத்தான் 2018 என்பது ஒரு நிறுத்தமில்லா டிஜிட்டல் பொருட்கள் உருவாக்கப் போட்டியாகும். இது தொழில்நுட்பம் தெரிந்த மாணவர்களுக்கு தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்கான புதுமையான தீர்வுகளைக் கண்டறிவதற்கான ஒரு நிகழ்ச்சியாகும்.
மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்காக இந்நிகழ்ச்சி கல்வி நிறுவன அளவிலும் ஹேகத்தான்களை நடத்த தூண்டுகிறது.
இது ஸ்டார்ட் அப் இந்தியா பிரச்சாரத்திற்கு வழியேற்படுத்திக் கொடுப்பதுடன், ஆட்சி முறையை மேம்படுத்துவதற்காகவும், தரமான வாழ்க்கைக்காகவும் பலதரப்பட்ட தீர்வுகளை வழங்குகிறது.
இது இந்தியாவை அச்சுறுத்தும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண குடிமக்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
ஸ்மார்ட் இந்தியா ஹேகத்தான் 2018 ஆனது ஸ்மார்ட் இந்தியா ஹேகத்தான் 2017ஐத் தொடர்ந்தான இரண்டாவது மிகப்பெரிய அளவிலான ஹேகத்தான் நிகழ்ச்சியாகும்.