மகாராஷ்டிராவின் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மகாராஷ்டிரா மாநிலத்தின் விவசாய தொழில்கள் மற்றும் கிராமப்புற மாற்றம் (State of Maharashtra’s Agribusiness and Rural Transformation ) அல்லது ஸ்மார்ட் (SMART) எனும் பிரத்தியேக முன்முயற்சியைத் தொடங்கியுள்ளார்.
இது அடுத்த 3 ஆண்டுகளில் நீடித்த விவசாயத்தை அடைவதை இலக்காகக் கொண்டு 10,000 கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
இதன் நோக்கம் கிராமப்புற மாற்றத்தினை ஊக்கப்படுத்துதல் மற்றும் 2022 ஆம் ஆண்டு அளவில் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துதல் ஆகியனவாகும்.
இது உலக வங்கியால் உதவியளிக்கப்படும் ஒரு திட்டமாகும்.
இந்திய தொழில் கூட்டமைப்பானது (CII - Confederation of Indian Industry) இந்த முன்முயற்சியின் தொழில்துறைப் பங்காளராகும்.