TNPSC Thervupettagam

ஸ்ரீசைலம் புலிகள் வளங்காப்பகத்தில் இந்தியக் காட்டெருது

July 8 , 2024 139 days 151 0
  • ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் மாவட்டத்தில் உள்ள நல்லமலை வனப்பகுதியின் அத்மகூர் பகுதியில் இந்தியக் காட்டெருது (போஸ் கௌரஸ்) கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்தக் காட்டில் முன்னொரு காலத்தில் இந்தியக் காட்டெருது (தெலுங்கு மொழியில் அடவி துன்னா) காணப்பட்டது என்பதோடு இது விசித்திரமாக நீண்ட காலமாக அந்தப் பகுதியில் தென்படாமல் இருந்தது.
  • இந்தியக் காட்டெருது ஆனது கடைசியாக 1870 ஆம் ஆண்டுகளில் இங்கு கண்டறியப் பட்டது எனவே இது 150 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தென்பட்டுள்ளது.
  • இந்தியக் காட்டெருது என்றும் அழைக்கப்படும் கௌர், தெற்காசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட மிகப் பெரிய மாடு இனமாகும்.
  • நாகார்ஜுனசாகர்-ஸ்ரீசைலம் புலிகள் வளங்காப்பகமானது இந்தியாவின் மிகப்பெரிய  புலிகள் வளங்காப்பகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்