மத்திய இரயில்வே அமைச்சகமானது நாட்டில் உள்ள 635 இரயில்வே நிலையங்களை மேம்படுத்துவதற்காக, “ஸ்ரீஜன்” (SRIJAN) எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
SRIJAN என்பதன் விரிவாக்கம் ஆங்கிலத்தில் Station Rejuvenation through Joint Action என்பதாகும்.
இது தமிழில், கூட்டு செயற் நடவடிக்கை மூலம் இரயில்வே நிலையங்களை புனரமைத்தல் என பொருள்படும்.
இந்திய இரயில் நிலைய மேம்பாட்டு கார்ப்பரேஷன் நிறுவனத்தினால் (Indian Railway Station Development Corporation Limited - IRSDC) ” My Government” இணைய வாயிலில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய இரயில் நிலைய மேம்பாட்டுக் கழக நிறுவமானது நாடு முழுவதும் சுமார் 600 பெரிய இரயில் நிலையங்களை புனரமைப்பதற்கு மிகப்பெரிய மறு மேம்பாட்டுத் (Redevelopment) திட்டம் ஒன்றை துவங்கியுள்ளது.
My Gov Portal
நாட்டின் ஆளுகை (Governance) மற்றும் மேம்பாட்டில் குடிமக்களின் செயற் தன்மையுடைய பங்கெடுப்பை மேம்படுத்துவதற்காக 2014 –ஆம் ஆண்டு குடிமக்கள் பங்கெடுப்பு தளமாக இந்த இந்த இணையவாயில் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
தேசிய தகவலியல் மையத்தால் (National Informatics Centre - NIC) இந்த இணைய வாயில் நிர்வகிக்கப்படுகிறது.