TNPSC Thervupettagam

“ஸ்ரீஜன்” - My Gov. இணையதளம்

March 5 , 2018 2327 days 790 0
  • மத்திய இரயில்வே  அமைச்சகமானது நாட்டில் உள்ள 635  இரயில்வே நிலையங்களை மேம்படுத்துவதற்காக, “ஸ்ரீஜன்” (SRIJAN) எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • SRIJAN என்பதன் விரிவாக்கம் ஆங்கிலத்தில் Station Rejuvenation through Joint Action என்பதாகும்.
  • இது தமிழில், கூட்டு செயற் நடவடிக்கை மூலம் இரயில்வே நிலையங்களை புனரமைத்தல் என பொருள்படும்.
  • இந்திய இரயில் நிலைய மேம்பாட்டு கார்ப்பரேஷன் நிறுவனத்தினால்  (Indian Railway Station Development Corporation Limited - IRSDC) ” My Government” இணைய வாயிலில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்திய இரயில் நிலைய மேம்பாட்டுக் கழக நிறுவமானது நாடு முழுவதும் சுமார் 600 பெரிய இரயில் நிலையங்களை புனரமைப்பதற்கு மிகப்பெரிய மறு மேம்பாட்டுத் (Redevelopment) திட்டம்  ஒன்றை  துவங்கியுள்ளது.

My Gov Portal

  • நாட்டின் ஆளுகை (Governance) மற்றும் மேம்பாட்டில் குடிமக்களின் செயற் தன்மையுடைய பங்கெடுப்பை மேம்படுத்துவதற்காக 2014 –ஆம் ஆண்டு குடிமக்கள்  பங்கெடுப்பு  தளமாக  இந்த இந்த இணையவாயில் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
  • தேசிய தகவலியல் மையத்தால் (National Informatics Centre - NIC) இந்த இணைய வாயில் நிர்வகிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்