ஸ்வச் சர்வேக்சன் தேசியத் தரவரிசை
October 10 , 2022
780 days
525
- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இந்த ஆண்டிற்கான ஸ்வச் சர்வேக்சன் தேசியத் தர வரிசையில் சென்னை 44வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
- இது ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே அமைப்பினை விட சற்றுப் பின்தங்கி உள்ளது.
- இந்தப் பட்டியலில் மூன்று தமிழக நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
- இதில் கோவை 42வது இடத்தையும், சென்னை 44வது இடத்தையும், மதுரை 45வது இடத்தையும் பிடித்துள்ளன.
- கடந்த ஆண்டு, சென்னை 43வது இடத்தில் இருந்ததோடு, 2020 ஆம் ஆண்டில் அது 45வது இடத்திலும் இருந்தது.
- இந்தத் தரவரிசையில் இந்தூர் நகரம் தொடர்ந்து ஆறாவது ஆண்டாகத் தூய்மையான நகரமாக இடம் பெற்றுள்ளது.
- நீர் மேலாண்மைக்கான சுஜலம் 1.0 திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழக மாநிலம் ஐந்தாவது இடத்தைப் பெற்றது.
Post Views:
525