மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் “ஸ்வச் சர்வேக்ஷன் கிராமீன் 2019” விருதுகளை தர வரிசையில் முன்னிலை வகிக்கும் மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு வழங்கினார்.
உலகக் கழிவறை தினத்தை முன்னிட்டு (நவம்பர் 19) பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
இந்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தைத் தொடர்ந்து ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் இத்தரவரிசைப் பட்டியலில் உள்ளன.
இந்திய மாவட்டங்களில் தெலுங்கானாவில் உள்ள பெடப்பள்ளி மாவட்டம் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து ஃபரிதாபாத் (ஹரியானா) மற்றும் ரேவாரி (ஹரியானா) மாவட்டங்களும் விருதுகளைப் பெற்றன.
உத்தரப் பிரதேசம் அதிகபட்ச பங்களிப்பைக் கொண்ட மாநிலமாக இருந்தது.