TNPSC Thervupettagam

ஸ்வச் பாரத் திட்டம் பற்றிய உலக வங்கியின் அறிக்கை

October 8 , 2023 287 days 305 0
  • ஸ்வச் பாரத் திட்டம் – கிராமின் (SBM-G) திட்டத்தின் முன்னேற்றம் குறித்த உலக வங்கியின் துறை சார்ந்த அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இத்திட்டம் தொடங்கப்பட்ட 2014-15 ஆம் ஆண்டிலிருந்து கிராமப்புற இந்தியாவில் கழிப்பறை அணுகலைக் கொண்டு வருவதற்கான இத்திட்டத்தினால் கிடைத்த பலன்கள் ஒருபுறம் இருக்க, 2018-19 ஆம் ஆண்டு முதல் கிராமப்புற இந்தியாவில் வழக்கமான கழிப்பறை பயன்பாடு குறைந்து வருவதற்கான தெளிவான போக்குப் பதிவாகியுள்ளது.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடி சமூகப் பொருளாதாரக் குழுக்களின் மத்தியில் கழிப்பறை பயன்பாடு மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது.
  • இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல், கிராமப்புற இந்தியாவில் சொந்தமாக அல்லது பகிரப்பட்ட மேம்படுத்தப்பட்ட கழிப்பறைகளை அணுகுவதில் கணிசமான அதிகரிப்புக்கு வழிவகுத்தது.
  • 2012 ஆம் ஆண்டில் 38% ஆக இருந்த கழிவறைப் பயன்பாடு 2019-20 ஆம் ஆண்டில் 90% ஆக பதிவானது.
  • இந்தக் காலப்பகுதியின் கடைசி இரண்டு ஆண்டுகளில் பதிவாகிய மிக அதிகபட்ச உயர்வு இதுவாகும்.
  • 2015-2019 ஆம் ஆண்டில் அமல்படுத்தப் பட்ட முதல் கட்டத்தில், பெரிய அளவிலான மேம்பாடுகளால் மேற்கொள்ளப்பட்டன.
  • அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் அத்திட்டத்தின் அமலாக்கத்தில் சில தேக்கம் மற்றும் சரிவுகள் பதிவாகியுள்ளன.
  • 2015-16 மற்றும் 2019-21 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் கழிப்பறை பயன்பாடு 7 சதவீதத்திலிருந்து 43% ஆக உயர்ந்துள்ளதாகப் பதிவாகி உள்ளது.
  • கிராமப்புற மக்களில் 20% ஏழ்மையான மக்கள் மத்தியிலான கழிப்பறைப் பயன்பாட்டில் பெரிய உயர்வு பதிவானது
  • 20% பணக்காரர்களைத் தவிர அனைத்துப் பிரிவினரிலும் இதே போன்ற பெரிய அதிகரிப்புகள் பதிவாகியுள்ளன.
  • 2018 ஆம் ஆண்டு முதல் கழிப்பறைகள் பயன்பாட்டில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் மாநிலங்கள் உத்தரப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியனவாகும்.
  • ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற ஏழு மாநிலங்களில் பதிவான கழிப்பறைப் பயன்பாட்டில் 2018 ஆம் ஆண்டு முதல் சீரற்ற சரிவு பதிவாகி வருகிறது.
  • ஒடிசா, பஞ்சாப், கேரளா, பீகார், உத்தரகாண்ட், ஹரியானா மற்றும் அசாம் ஆகிய மற்ற ஏழு மாநிலங்கள் கழிப்பறை உபயோகத்தில் தொடர்ந்து நிலையான செயல்திறன் கொண்டவையாக திகழ்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்