TNPSC Thervupettagam

ஸ்வச் வாயு சர்வேக்சன் 2023

September 13 , 2023 313 days 227 0
  • இந்தக் கணக்கெடுப்பினை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமானது மேற்கொண்டு உள்ளது.
  • ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் பிரிவில், இந்தூர் முதல் இடத்தைப் பிடித்துள்ள நிலையில். அதைத் தொடர்ந்து ஆக்ரா மற்றும் தானே ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • மதுரை, ஹவ்ரா மற்றும் ஜாம்ஷெட்பூர் ஆகியவை முறையே 46, 45 மற்றும் 44வது இடங்களில் கடைசியாக உள்ளன.
  • போபால் ஐந்தாவது இடத்தினையும், டெல்லி ஒன்பதாவது இடத்தையும் பெற்றது.
  • 300,000 முதல் ஒரு மில்லியன் மக்கள்தொகை கொண்ட நகரங்கள் எனும் இரண்டாவது பிரிவில், அமராவதி முதல் இடத்தைப் பெற்றுள்ள நிலையில் அதைத் தொடர்ந்து மொராதாபாத் மற்றும் குண்டூர் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • ஜம்மு, குவஹாத்தி மற்றும் ஜலந்தர் ஆகியவை முறையே 38, 37 மற்றும் 36 இடங்களைப் பெற்றுள்ளன.
  • 300,000க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் என்ற மூன்றாவது பிரிவில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பர்வானூ முதல் இடத்தினையும், அதைத் தொடர்ந்து கலா அம்ப் மற்றும் அங்குல் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
  • இதில் கோஹிமா கடைசி இடத்தினை (39) பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்