ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் விருதுகள்
September 20 , 2018
2260 days
680
- மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் 2017-18 விருதுகளை புதுடெல்லியில் வழங்கியது.
- இது 2018 செப்டம்பர் 15 அன்று பிரதம மந்திரி ஸ்வச்சத்தா ஹை சேவா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வழங்கப்பட்டது.
- இந்த ஆண்டு முதன்முறையாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமல்லாது தனியார் பள்ளிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.
- கீழ்க்காண்பனவற்றிற்கு அதிகபட்ச ‘தேசிய ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் விருது’ பெற்ற பள்ளிகளை கொண்டுள்ளதற்காக அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்பட்டது
- புதுச்சேரி, தமிழ்நாடு, குஜராத், ஆந்திரப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்கள்.
- பாண்டிச்சேரி, ஸ்ரீகாகுளம், சண்டிகார், ஹிசார், காரைக்கால், லதூர், நெல்லூர், தெற்கு கோவா, வடோதரா ஆகிய 9 மாவட்டங்கள்
- ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் விருதானது, நீர், சுகாதாரம் மற்றும் தூய்மை ஆகியவற்றில் முன்மாதிரியான வேலைகளைச் செய்துள்ள பள்ளிகளை கௌரவிப்பதாகும்.
Post Views:
680