TNPSC Thervupettagam

ஸ்வச்சதா தரவரிசை விருதுகள் 2018

October 2 , 2018 2117 days 704 0
  • மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமானது உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஸ்வச்சதா தரவரிசை விருதுகள் 2018-ஐ புதுடெல்லியில் வழங்கியது.
  • ஸ்வச்சதா தரவரிசை விருதுகளுக்கான சிறந்த 51 உயர்கல்வி நிறுவனங்கள் 8 வெவ்வேறு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டன.
  • தரவரிசையில் 18 நிறுவனங்களைக் கொண்டு தமிழ்நாடானது தேசிய அளவில் இரண்டாம் ஆண்டாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
  • மொத்தமுள்ள 8 பிரிவுகளில் தமிழ்நாட்டு நிறுவனங்கள் கீழ்க்காணும் 4 பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்தன.
    • உறைவிட தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (அமிர்தா விஷ்வ வித்யபீடம், கோயம்புத்தூர்)
    • உறைவிட தொழில்நுட்பக் கல்லூரி (பனிமலர் பொறியியல் கல்லூரி, சென்னை)
    • உறைவிடமற்ற கல்லூரி (ஸ்ரீ பராசக்தி பெண்கள் கல்வியியல் கல்லூரி, திருநெல்வேலி)
    • உறைவிடமற்ற தொழில்நுட்பக் கல்லூரி (ஈஸ்வரி பொறியியல் கல்லூரி, சென்னை)
  • PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது உறைவிட கல்லூரிப் பிரிவில் 2-ம் இடத்தை பிடித்தது.
  • IIT-சென்னையானது உறைவிடப் பிரிவின் தொழில்நுட்பக் கல்லூரி/ பல்கலைக் கழகங்கள் பிரிவில் 8-ம் இடத்தைப் பிடித்துள்ளது.
  • உறைவிட தொழில்நுட்ப கல்லூரிகள் பிரிவில் 4 தமிழக கல்லூரிகள் முதல் 6 இடங்களைப் பிடித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்