August 17 , 2018
2297 days
987
- ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் முதல் திட்டமாக ‘வடகிழக்கு சுற்று : இம்பால் மற்றும் கொங்க்ஜோம்’ ஆனது மணிப்பூரில் தொடங்கப்பட்டது.
- இத்திட்டமானது மணிப்பூரின் காங்லா கோட்டை மற்றும் கொங்க்ஜோம் ஆகிய இரண்டு தளங்களை உள்ளடக்கியது.
- இத்திட்டத்தின் கீழ் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்கிறது.
- இத்திட்டமானது மத்திய சுற்றுலாத்துறையால் கருத்துறு அடிப்படையிலான சுற்றுலா சுற்றுப் பாதைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
- இது பொதுநிதிக்காக மேற்கொள்ளப்படும் திட்ட கூறுகளுக்கான 100% மத்திய நிதியுதவி திட்டமாகும்.
- மேலும் இது பெரு நிறுவன சமூக பொறுப்பின் கீழ் தன்னார்வ நிதிக்கான வசதியை அளிக்கும் வசதியையும் கொண்டுள்ளது.
- காங்லா கோட்டையானது கடந்த கால மணிப்பூர் மீட்டீ ஆட்சியாளர்களின் பாரம்பரிய இருக்கையாக 1891ஆம் ஆண்டு வரை இருந்துள்ளது.
- மணிப்பூரின் இம்பால் நகரில் உள்ள பழைய கோவித்தாஜீ கோவில் மிகப்பெரிய இந்து, வைணவ கோவிலாகும்.
Post Views:
987