திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சகம் (MSDE) ஆனது, நிதி ஆயோக் அமைப்புடன் இணைந்து அசாம், மேகாலயா மற்றும் மிசோரம் ஆகிய சில மாநிலங்களில் ஸ்வவலம்பினி திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
இந்த மகளிர் தொழில்முனைவோர் திட்டம் ஆனது, வடகிழக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் (HEIs) மாணவிகளுக்குப் பெரும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது.
இது அவர்களின் தொழில்முனைவுப் பயணத்தில் பெரும் வெற்றி பெற அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய தொழில்முனைவோர் மனநிலை, வளங்கள் மற்றும் வழி காட்டுதலுடன் அவர்களைச் சித்தப்படுத்தும்.