சோலினாஸ் இன்டெக்ரிட்டி எனப்படும் பருவநிலைத் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனமானது, கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய்களில் கசிவுகள் ஏற்படுவதை ஆராய உதவும் எந்திர மனிதனை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்வஸ்த் AI மற்றும் கழிவுநீர் குழாயின் உள்ளக ஆய்வு எந்திர மனிதன் (எண்டோபோட்) நாட்டின் நகர்ப்புறக் கழிவுநீர் உள்கட்டமைப்பில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த நிறுவனம் உருவாக்கிய குழாய் ஆய்வு எந்திர மனித அமைப்புகளுடன் கூடுதலாக எண்டோபோட் உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்வாஸ்த் AI எந்திரத்தின் மேகக் கணிமம் அடிப்படையிலான கட்டமைப்பு ஆனது, ஒரே இடத்தில் அணுகக் கூடிய ஓர் இடைமுகத்தில் முழு வழங்கீட்டு வலையமைப்பினையும் பராமரிக்கவும் மேலாண்மை செய்யவும் உதவுகிறது.