TNPSC Thervupettagam
May 17 , 2020 1528 days 621 0
  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுவின் கீழ் இயங்கும்  பெங்களூருவை மையமாகக் கொண்ட தேசிய விண்வெளி ஆய்வகங்கள்  நிறுவனம் ஸ்வஸ்த் வாயு என்ற பெயரில் ஒரு பைபாப் (BiPAP) செயற்கை சுவாசப் பெருக்கி கருவி ஒன்றை உருவாக்கியுள்ளது.
  • கோவிட் -19 நோயின் தீவிர தாக்குதலிற்கு உட்படாத மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை தேவைப்படாத நோயாளிகளுக்குப் பயன்படும் இது உடலின் வெளிப்புறத்தில் பொருத்தப்படும் ஒரு சுவாச ஆதரவு சாதனமாகும்.
  • பைபாப் என்பது (BiPAP - Bilevel Positive Airway Pressure) ஒரு வகை நேர்மறை அழுத்த சுவாசக் கருவியாகும். 
  • இது 36 நாட்கள் என்ற குறுகிய காலத்திற்குள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இதில் ஆக்ஸிஜன் செறிவூட்டியை வெளிப்புறமாக இணைப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன.
  • இந்த செயற்கை சுவாசக் கருவி சோதனை மற்றும் அளவுத் திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தினால் (National Accreditation Board for Testing and Calibration Laboratories) அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்