ஸ்விஸ் உள்ளரங்க டென்னிஸ் -ரோஜர் ஃபெடரருக்கு 8-ஆவது பட்டம்
October 31 , 2017 2613 days 904 0
ஸ்விட்சர்லாந்தின் பேசல்ஸ் நகரில் நடைபெற்ற ஸ்விஸ் உள்ளரங்க டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவை தோற்கடித்து 8-ஆவது முறையாக ஸ்விஸ் உள்ளரங்க டென்னிஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
தனது 95-ஆவது ஏடிபி பட்டத்தைக் கைப்பற்றியுள்ள ரோஜர் ஃபெடரர், அதிக ஏடிபி பட்டங்கள் வென்றவர்கள் வரிசையில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஜிம்மி கார்னர் 109 பட்டங்களுடன் முதலிடத்திலும், இவான் லென்டில் 94 பட்டங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.