ஸ்வீடனின் Torrefaction (தாளடியிலிருந்து நிலக்கரி போன்ற பொருளை உருவாக்கும் வெப்ப முறை) தொழில்நுட்பம்
December 9 , 2019 1815 days 567 0
தில்லியில் காற்றின் தரம் குறைவதைத் தவிர்க்கும் பொருட்டு, இந்திய அரசானது ஸ்வீடன் நாடு பின்பற்றும் தொழில்நுட்பத்தை, அதாவது நெல் தாளடியிலிருந்து ‘உயிர் நிலக்கரியாக’ மாற்றக் கூடிய Torrefaction என்ற முறையை சோதனை செய்து வருகின்றது.
இந்தத் தொழில்நுட்பத்தின் சாத்தியக் கூறுகளை மதிப்பிடுவதற்காக பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலியில் உள்ள தேசிய வேளாண் உணவு உயிரி தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் ஸ்வீடன் நிறுவனத்துடனான ஒரு சோதனைத் திட்டத்திற்கு அரசாங்கம் நிதியளித்துள்ளது.
Torrefaction என்பது உயிர்மப் பொருளை (250 டிகிரி செல்சியஸ் - 350 டிகிரி செல்சியஸ் அளவிலான வெப்பநிலைக்கு உட்படுத்தி) நிலக்கரி போன்ற பொருளாக மாற்றுவதற்கான ஒரு வெப்ப செயல்முறையாகும். இது அசல் உயிர்த்திரளை விட சிறந்த எரிபொருள் பண்புகளைக் கொண்டுள்ளது.
நன்மைகள் – இம்முறையின் மூலம் உருவாக்கப்பட்ட உயிர்த் திரளானது எளிதில் உடையக் கூடியது. இது குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தக் கூடியது. இது கரியமில வாயு உமிழ்வை 95% குறைக்கும் திறன் கொண்டது.
இது நிலக்கரியுடன் ஒப்பிடப்படும் போது குறைந்த கந்தகம் மற்றும் சாம்பல் தொகுதிகளைக் கொண்டுள்ளது.