TNPSC Thervupettagam

ஸ்வீடனின் Torrefaction (தாளடியிலிருந்து நிலக்கரி போன்ற பொருளை உருவாக்கும் வெப்ப முறை) தொழில்நுட்பம்

December 9 , 2019 1687 days 509 0
  • தில்லியில் காற்றின் தரம் குறைவதைத் தவிர்க்கும் பொருட்டு, இந்திய அரசானது ஸ்வீடன் நாடு பின்பற்றும் தொழில்நுட்பத்தை, அதாவது நெல் தாளடியிலிருந்து ‘உயிர் நிலக்கரியாக’ மாற்றக் கூடிய Torrefaction என்ற முறையை சோதனை செய்து வருகின்றது.
  • இந்தத் தொழில்நுட்பத்தின் சாத்தியக் கூறுகளை மதிப்பிடுவதற்காக பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலியில் உள்ள தேசிய வேளாண் உணவு உயிரி தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் ஸ்வீடன் நிறுவனத்துடனான ஒரு சோதனைத் திட்டத்திற்கு அரசாங்கம் நிதியளித்துள்ளது.
  • Torrefaction என்பது உயிர்மப் பொருளை (250 டிகிரி செல்சியஸ் - 350 டிகிரி செல்சியஸ் அளவிலான வெப்பநிலைக்கு உட்படுத்தி) நிலக்கரி போன்ற பொருளாக மாற்றுவதற்கான ஒரு வெப்ப செயல்முறையாகும். இது அசல் உயிர்த்திரளை விட சிறந்த எரிபொருள் பண்புகளைக் கொண்டுள்ளது.
  • நன்மைகள் – இம்முறையின் மூலம் உருவாக்கப்பட்ட உயிர்த் திரளானது எளிதில் உடையக் கூடியது. இது குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தக் கூடியது. இது கரியமில வாயு உமிழ்வை 95% குறைக்கும் திறன் கொண்டது.
  • இது நிலக்கரியுடன் ஒப்பிடப்படும் போது குறைந்த கந்தகம் மற்றும் சாம்பல் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்