TNPSC Thervupettagam

ஸ்வீடனின் ‘பெண்ணிய வெளியுறவுக் கொள்கை’

August 25 , 2018 2188 days 1250 0
  • உலகளாவிய அளவில் பெண்களின் உரிமைகளை ஊக்குவிப்பதற்காக நாட்டின் முதன்மை அணுகுமுறையை முன்னிலைப்படுத்த ஸ்வீடன் நாடு ‘பெண்ணிய வெளியுறவுக் கொள்கை’ கையேட்டை வெளியிட்டுள்ளது.
  • 2014ல் துவக்கப்பட்டதிலிருந்து இது ஸ்வீடன் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மார்கோட் வால்ஸ்ட்ராமின் தலைமையில் நடத்தப்படுகிறது.
  • பொருளாதாரச் சுதந்திரத்தை ஊக்குவித்தல், பாலியல் வன்முறைகளுக்கெதிராக போராடுதல் மற்றும் பெண்களின் அரசியல் பங்களிப்பை மேம்படுத்துதல் ஆகியவை இக்கொள்கையின் முக்கிய நோக்கங்களாகும்.
  • இது போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான், கொலம்பியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, லைபீரியா மற்றும் பாலஸ்தீனிய பிரதேசங்கள் ஆகிய 5 நாடுகளில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நடவடிக்கைத் திட்டங்களை உள்ளடக்கியது.
  • ஸ்வீடனின் பெண் தூதர்களின் எண்ணிக்கை 1996-ல் வெறும் 10 சதவீதத்திலிருந்து 2016-ல் 40 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்