TNPSC Thervupettagam

ஹங்கேரி – விக்டர் ஆர்பன்

April 19 , 2018 2412 days 822 0
  • அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஹங்கேரி நாட்டின் பிரதமரான விக்டர் ஆர்பன் (Viktor Orban) தொடர்ந்து மூன்றாவது முறையாக மாபெரும் வெற்றியைப்   பெற்றுள்ளார்.
  • 199 இடங்களைக் கொண்ட ஹங்கேரி பாராளுமன்றத்தில் அவருடைய வலது சாரி பிடெஸ் கட்சி (Fidesz party) 134 இடங்களை வென்றுள்ளது.
  • அண்மையில் நடந்து முடிந்த ஹங்கேரி தேர்தலில், பிற தேசியக் கட்சிகளான ஜோபிக் கட்சி (Jobbik Party) 25 இடங்களையும், சோஷியலிஸ்ட் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 20 இடங்களையும் வென்றுள்ளன.

  • இந்த மாபெரும் வெற்றியின் மூலம் மூன்றாவது முறையாக விக்டர் ஆர்பன் நாடாளுமன்றத்தில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையைக் கொண்டுள்ளார்.
  • அதாவது அரசியலமைப்பு சட்ட விதிகளை மாற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.
  • ஒட்டுமொத்தமாக விக்டர் ஆர்பன் நான்காவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.
  • 1989-ஆம் ஆண்டு ஹங்கேரியில் கம்யூனிஸம் வீழ்ந்ததிலிருந்து, ஹங்கேரி நாட்டினுடைய நீண்ட காலம் ஆட்சி புரிந்து வரும் தலைவர் விக்டர் ஆர்பன் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்