இமாச்சலப் பிரதேச அரசானது, சிர்மௌர் மாவட்டத்தின் கிரி பகுதியின் எல்லையில் உள்ள ஹட்டீ சமூகத்திற்கு பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) அந்தஸ்து வழங்கச் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
இது சிர்மௌர் மாவட்டத்தின் குஜ்ஜார் சமூகத்தினரால் - அப்பகுதியில் உள்ள ஒரே மற்ற பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சமூகம் - வன்முறையில் ஈடுபட மேற்கொள்ள வழிவகுத்தது.
ஆனால் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் இந்த அறிவிப்பை நிறுத்தி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
மத்திய அரசு ஆனது 1995, 2006 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இந்த கோரிக்கையை ஏற்கனவே மூன்று முறை நிராகரித்துள்ளது.
1967 ஆம் ஆண்டிலேயே உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜான்சர்-பவார் பகுதியின் அடிப்படையில் கிரி பகுதியின் எல்லைப் பகுதியில் வசிப்பவர்கள் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் அந்தஸ்து கோரி வந்தனர்.
பழைய சிர்மௌர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த எல்லை சார் கிரி பகுதி மற்றும் ஜான்சர் பவார் பகுதிகள் அனைத்து அம்சங்களிலும் ஒற்றுமையைக் கொண்டு உள்ளன.