TNPSC Thervupettagam
March 23 , 2020 1711 days 517 0
  • புனேவில் உள்ள தேசிய உயிரணு அறிவியல் மையத்தைச் சேர்ந்த ஆராயச்சியாளர்கள் நோயுண்டாக்கும் ஹண்டிங்டின் புரதமானது உயிரணுக்களின் ஒட்டு மொத்த புரத உற்பத்தியைக் குறைக்கின்றது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
  • ஹண்டிங்டின் நோய் என்பது ஒரு அதிகரிக்கும் மரபணுப் பிரச்சினையாகும்.
  • இது மூளையைப் பாதித்து, பின்வருவனவற்றை ஏற்படுத்துகின்றது.
    • கட்டுப்பாடற்ற இயக்கங்கள்,
    • சமநிலை மற்றும் இயக்கத்தின் பலவீனமான ஒத்துழைப்பு
    • அறிவுத் திறன் குறைதல்
    • கவனம் செலுத்துதலில் கடினத் தன்மை மற்றும் நினைவு இழப்பு
    • கட்டுப்பாடற்ற மனநிலை
    • ஆளுமை மாற்றம்
  • இது HTT மரபணு (ஹண்டிங்டின் மரபணு) என்று அழைக்கப்படும் மரபணுவில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக ஏற்படுகின்றது.
  • HTT மரபணுக்கள் ஹண்டிங்டின் என்று அழைக்கப்படும் புரதத்தின் உற்பத்தியில் பங்கு கொள்கின்றன.
  • இவை புரதத்தை உருவாக்குவதற்கான அறிவுரைகளை வழங்குகின்றன.
  • இந்த மரபணுக்கள் மாற்றம் பெற்றால், இவை தவறான அறிவுரைகளை வழங்கி அசாதாரண ஹண்டிங்டின் புரத உற்பத்திக்கு வழி வகுக்கும். பின்னர் இவை உருவமற்றவைகளாக மாறுகின்றன.
  • இந்த உருவமற்ற அமைப்புகள் மூளை உயிரணுக்களின் வழக்கமானச் செயல்பாடுகளைப் பாதிக்கின்றன. இவை மூளையில் உள்ள நரம்புகளின் செயலிழப்பிற்கு வழி வகுக்கும். இதன் காரணமாக ஹண்டிங்டின் நோய் ஏற்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்