மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தலைமையிலான பாரத்GPT குழுவானது மற்ற ஏழு உயரடுக்கு இந்திய பொறியியல் நிறுவனங்களுடன் இணைந்து 'ஹனூமான்' இந்திய மொழி மாதிரி தொடர்களை உருவாக்கியுள்ளது.
இது இந்தி, தமிழ் மற்றும் மராத்தி போன்ற 11 இந்திய மொழிகளில் பதிலளிக்கக் கூடியது என்பதோடு 20க்கும் மேற்பட்ட மொழிகளில் விரிவுபடுத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது.
சுகாதாரம், நிர்வாகம், நிதிச் சேவைகள் மற்றும் கல்வி உள்ளிட்ட நான்கு துறைகளில் சேவை வழங்கும் வகையில் ஹனூமான் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெரிய மொழி மாதிரிகள், பெரிய அளவிலான உரையைச் செயலாக்குவதற்காக உள்ளார்ந்த கற்றல் நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன.