TNPSC Thervupettagam

ஹன்ரட் கிரிக்கெட் - புதிய கிரிக்கெட் வடிவம்

October 22 , 2019 1863 days 760 0
  • 2020 ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கப் பட்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தால் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடத்தப் பெறும் சுமார் 100 பந்துவீச்சுகளைக் கொண்ட ஒரு தொழில்சார் கிரிக்கெட் போட்டியின் பெயர் ஹன்ரட் கிரிக்கெட் ஆகும்.
  • இந்தக் கிரிக்கெட் போட்டி ஒரு புதிய முறையில் விளையாடப்படும்.
  • 100 பந்துவீச்சுகளைக் கொண்ட கிரிக்கெட் என்பது வரையறுக்கப்பட்ட ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட்டின் ஒரு வடிவமாகும். இதில் இரண்டு அணிகளும் தலா 100 பந்துவீச்சுகளை உள்ளடக்கிய ஒரு இன்னிங்ஸில் விளையாடுகின்றன.
விளையாட்டின் வடிவம்
  • ஒரு இன்னிங்ஸுக்கு 100 பந்துகள் ஆகும்.
  • 10 பந்துகளுக்கு ஒரு முறை ஓவர் மாற்றப் படும்.
  • பந்து வீச்சாளர்கள் தொடர்ச்சியாக ஐந்து அல்லது 10 பந்துகளை வீசுவார்கள்.
  • ஒவ்வொருப் பந்து வீச்சாளரும் ஒரு ஆட்டத்திற்கு அதிகபட்சம் 20 பந்துகளை வீச முடியும்.
  • ஒவ்வொரு அணிக்கும் 25 பந்துகள் கொண்ட பவர் பிளே இருக்கும்.
  • பவர் பிளேயின் போது 30 யார்டு வட்டத்திற்கு வெளியே இரண்டு ஃபீல்டர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்