TNPSC Thervupettagam

ஹன்ஸ்ராஜ் வர்மா குழு

January 28 , 2021 1305 days 1002 0
  • முதல்வர் பழனிசாமி அவர்கள் குடும்பன், பன்னாடி, கடையன், பள்ளர், காலாடி, வத்திரியன் மற்றும் தேவேந்திர குலத்தான் என்ற பட்டியல் இனத்தவரின் 7 துணைப் பிரிவுகள் தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
  • இது ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையிலான ஒரு குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டதாகும்.
  • இது தேவேந்திர குல வேளாளர் சமூகம் மற்றும் புதிய தமிழகம் கட்சி ஆகியவற்றின்  ஒரு மிக நீண்ட காலக் கோரிக்கையாகும்.
  • தமிழ்நாடு மாநில அரசானது தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் கீழ் இந்த 7 துணைப் பிரிவுகளையும் சேர்க்க மத்திய அரசிற்குப் பரிந்துரைக்க உள்ளது.
  • ஆனால் அவர்களது சமூகப்-பொருளாதார நிலைமையின் காரணமாக, அந்தச் சமூகமானது கல்வி மற்றும் பணி வாய்ப்புகளில் அதே இடஒதுக்கீட்டையே தொடர்ந்து பெற உள்ளது.
  • எனினும், அந்தச் சமூகத்தின் ஒரு இதரக் கோரிக்கையான பட்டியல் இனத்தவர் என்ற பிரிவிலிருந்து தங்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையானது அரசிடம் இன்னும் நிலுவையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்