ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி
May 1 , 2020
1672 days
1264
- நாசா தனது ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி ஏவப்பட்டதின் 30வது ஆண்டு அனுசரிப்பை ஏப்ரல் 24 அன்று கொண்டாடியது.
- இது உலகில் மிக நீண்ட காலமாகச் செயல்பாட்டில் உள்ள விண்வெளித் தொலைநோக்கிகளில் ஒன்றாகும்.
- ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் கூட்டுடன் இணைந்து பிரபஞ்சத்தின் விரைவான விரிவாக்கத்தைக் கண்டுபிடித்ததில் இத்தொலைநோக்கி ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.
- அதன் 30வது ஆண்டு விழாவில், ஹப்பிள் தொலைநோக்கி ஒரு அண்ட நட்சத்திரத் திட்டைப் படம் பிடித்துள்ளது.
- நட்சத்திரத் திட்டு என்பது நட்சத்திரங்களின் ஒரு கூட்டமாகும்.
- இந்தக் கூட்டத்தில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரமும் சூரியனை விடவும் அளவில் பத்து மடங்கு பெரிதாகும்.
- இந்நட்சத்திரங்கள் ஒரு விண்மீன் முகிற்படலத்தில் (நெபுலாவில்) உள்ளன.
- விண்மீன் முகிற்படலம் என்பது வாயு மற்றும் தூசியைக் கொண்ட ஒரு பெரிய மேகமாகும்.
- நட்சத்திரத் திட்டுகள் தன்னைச் சுற்றிலும் ஒளிரும் சிவப்பு நிறத்தைக் கொண்டுள்ளது.
- நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் வாயுவின் ஒளிருதல் காரணமாக சிவப்பு நிறமாக அது ஒளிர்கிறது.
- ஆக்சிஜன் இருப்பதால் நட்சத்திரத் திட்டுகளில் நீல நிறம் தோன்றுகின்றது.
Post Views:
1264