TNPSC Thervupettagam
August 4 , 2024 111 days 154 0
  • ஹமாஸ் அமைப்பின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் தங்கி இருந்த இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார்.
  • நாடு கடத்தப்பட்ட ஹனியே, கத்தாரில் இருந்தபடி ஹமாஸின் பல்வேறு அரசியல் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கினார்.
  • 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில், ஹனியே இஸ்ரேலிய நாட்டின் சிறைகளில் பல தண்டனைகளை அனுபவித்தார்.
  • 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்ற பிறகு, அவர் பாலஸ்தீனிய அதிகார அரசாங்கத்தின் பிரதமரானார்.
  • எனினும், 2007 ஆம் ஆண்டில் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அவர்களால் அடுத்த ஆண்டு அவர் பதவி நீக்கம் செய்யப் பட்டதால் அவர் பதவிக் காலம் குறுகிய காலமே நீடித்தது.
  • பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2017 ஆம் ஆண்டில், அவர் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அதே ஆண்டு, ஹனியே அமெரிக்காவினால் "பிரத்தியேகமாக நிர்ணயிக்கப்பட்ட ஒரு உலகளாவிய தீவிரவாதி" என்று அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்