TNPSC Thervupettagam

ஹம்பன்தோட்டா – முறையான ஒப்படைப்பு

December 12 , 2017 2570 days 877 0
  • இலங்கையின் தெற்கு மாகாணத்தில் அமைந்துள்ள வர்த்தக மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த (strategic) ஹம்பன்தோட்டா துறைமுகத்தினை இலங்கை அரசு முறையான  (formally) வகையில்   99 வருட குத்தகைக்கு   சீனாவிடம் ஒப்படைத்துள்ளது.
  • இலங்கை ஹம்பன்தோட்டா துறைமுகத்தின் மேம்பாட்டிற்கென சீனாவிடம் வாங்கிய 8 மில்லியன் கடனை திருப்பி செலுத்துவதற்காக வேண்டி இந்த குத்தகை ஒப்படைப்பை இலங்கை மேற்கொண்டுள்ளது.
  • இந்த துறைமுகத்தைச் சுற்றிய முதலீட்டு மண்டலம் மற்றும் துறைமுகப் பகுதிகளை இலங்கை துறைமுக மேம்பாட்டு ஆணையமும், சீனாவின் Merchants Port Holding கம்பெனியும் இணைந்து உரிமங் கொள்ளும்.
  • மேலும் கடந்த ஜீலை மாதம் 1.1 மில்லியன் டாலர்கள் அளவிலான ஒப்பந்தத்தில் ஹம்பன்தோட்டா துறைமுகத்தின் 70 சதவீதப் பங்கினை சீனாவிற்கு அளிக்க அந்நாட்டிடம்  இலங்கை அரசு ஒப்பந்தம்  ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • மேலும் இலங்கை அரசானது பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த (strategic) இந்த துறைமுகம் எந்த நாட்டினுடைய இராணுவத் தளமாகவும் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் உறுதியளித்துள்ளது.
  • 2007ஆம் ஆண்டு முதல் சீனாவின் குவாங்சூ (Guangzhou) நகரோடு ஹம்பன்தோட்டா துறைமுக நகரமானது இரட்டை நகரமாக (Twin Cities)  ஒருங்கமையும்  படி உருவாக்கப்பட்டு வருகின்றது.
  • புவியியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வேறுபட்ட தொலைவுடைய இரு பகுதிகளின் நாடுகள் இடையே அல்லது பிராந்தியங்கள், மாகாணங்கள், மாநிலங்கள், நகரங்கள் இடையே சமூக அல்லது சட்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, அதன் வழி கட்டமைக்கப்படும் நகரங்களே இரட்டை நகரங்கள் எனப்படும்.
  • அமைதி மற்றும் சமரசத்திற்கான செயல்பாடாக வேறுபட்ட கலாச்சாரங்களுடைய இந்த இரு நகரங்களுக்கிடையே நட்புறவு மற்றும்  புரிந்துணர்வை வளர்ப்பதற்காகவும், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காகவும்  இத்தகு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்