இலங்கையின் தெற்கு மாகாணத்தில் அமைந்துள்ள வர்த்தக மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த (strategic) ஹம்பன்தோட்டா துறைமுகத்தினை இலங்கை அரசு முறையான (formally) வகையில் 99 வருட குத்தகைக்கு சீனாவிடம் ஒப்படைத்துள்ளது.
இலங்கை ஹம்பன்தோட்டா துறைமுகத்தின் மேம்பாட்டிற்கென சீனாவிடம் வாங்கிய 8 மில்லியன் கடனை திருப்பி செலுத்துவதற்காக வேண்டி இந்த குத்தகை ஒப்படைப்பை இலங்கை மேற்கொண்டுள்ளது.
இந்த துறைமுகத்தைச் சுற்றிய முதலீட்டு மண்டலம் மற்றும் துறைமுகப் பகுதிகளை இலங்கை துறைமுக மேம்பாட்டு ஆணையமும், சீனாவின் Merchants Port Holding கம்பெனியும் இணைந்து உரிமங் கொள்ளும்.
மேலும் கடந்த ஜீலை மாதம் 1.1 மில்லியன் டாலர்கள் அளவிலான ஒப்பந்தத்தில் ஹம்பன்தோட்டா துறைமுகத்தின் 70 சதவீதப் பங்கினை சீனாவிற்கு அளிக்க அந்நாட்டிடம் இலங்கை அரசு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
மேலும் இலங்கை அரசானது பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த (strategic) இந்த துறைமுகம் எந்த நாட்டினுடைய இராணுவத் தளமாகவும் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் உறுதியளித்துள்ளது.
2007ஆம் ஆண்டு முதல் சீனாவின் குவாங்சூ (Guangzhou) நகரோடு ஹம்பன்தோட்டா துறைமுக நகரமானது இரட்டை நகரமாக (Twin Cities) ஒருங்கமையும் படி உருவாக்கப்பட்டு வருகின்றது.
புவியியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வேறுபட்ட தொலைவுடைய இரு பகுதிகளின் நாடுகள் இடையே அல்லது பிராந்தியங்கள், மாகாணங்கள், மாநிலங்கள், நகரங்கள் இடையே சமூக அல்லது சட்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, அதன் வழி கட்டமைக்கப்படும் நகரங்களே இரட்டை நகரங்கள் எனப்படும்.
அமைதி மற்றும் சமரசத்திற்கான செயல்பாடாக வேறுபட்ட கலாச்சாரங்களுடைய இந்த இரு நகரங்களுக்கிடையே நட்புறவு மற்றும் புரிந்துணர்வை வளர்ப்பதற்காகவும், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காகவும் இத்தகு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.